தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். உரையை திருக்குறள் மற்றும் புறநானூறு பாடல்களை மேற்கோளிட்டு தொடங்கிய அவர், உழவர்களுக்கு முக்கிய நலத்திட்டங்களை அறிவித்தார்.
அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு பரிசுத் தொகை
நாட்டில் வேளாண்மையை ஊக்குவிக்க, அதிக விளைச்சல் பெறும் மூன்று சிறந்த விவசாயிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.
முதல் இடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ.2.50 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
இரண்டாவது இடம் பெறுபவருக்கு ரூ.1.50 லட்சம் பரிசு.
மூன்றாவது இடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
முக்கிய அறிவிப்புகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு "உயிர்மை சுற்றுலா" – வேளாண் பணிகளை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுப்பயணம் ஏற்பாடு.
'மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்' – மலைவாழ் விவசாயிகளுக்கான சிறப்பு நிதி மற்றும் ஆதரவு திட்டம்.
மண் வள மேம்பாட்டு திட்டம் – மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு அறிமுகம்.
"நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம்" – நெல் சாகுபடிப் பரப்பை அதிகரித்து உணவு தன்னிறைவு அடைய புதிய திட்டம்.
1000 வேளாண் பட்டதாரிகளின் மூலம் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் – உழவர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்க புதிய மையங்கள் உருவாக்கம்.
மாற்றுப் பயிர் சாகுபடிக்கு ரூ.12.5 கோடி நிதி ஒதுக்கீடு – 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் புதிய பயிர்கள் ஊக்குவிக்க திட்டம்.
பட்டியலின விவசாயிகளுக்கு மானிய உயர்வு – 60% முதல் 70% ஆக உயர்வு.
"உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம்" – உழவர்களை நேரில் சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் புதிய திட்டம்.
இந்த திட்டங்கள் மூலம் தமிழக உழவர்களுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகள் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.