தமிழக வெற்றிக் கழகத்துக்கு இன்று புதிதாக 19 மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பணிகளை மேற்கொள்ள தவெக சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 கட்டமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று 6ஆவது கட்டமாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக சபரிநாதன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் விஜயின் உதவியாளரும், முன்னாள் ஓட்டுநருமான ராஜேந்திரனின் மகன் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு கட்சியில் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை, 6 கட்டங்களாக 114 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து கூறியதோடு, புதிய நிர்வாகிகளுக்கு கழக தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.