வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், நாளை மறுநாள் (மார்ச் 19) பூமிக்கு திரும்ப உள்ளார். அவருடன் நாசா விண்வெளி வீரர் பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் இணைந்து பூமி திரும்புகிறார்கள்.
SpaceX Crew Dragon மூலம் பாதுகாப்பான பயணம்
தொழில்நுட்ப கோளாறுகளால் நீண்ட நாட்கள் பூமிக்கு திரும்ப முடியாமல் இருந்த இவர்களை, SpaceX Crew Dragon விண்கலம் அழைத்து வர உள்ளது. விண்கலம் மார்ச் 19 அன்று மாலை 3:27 மணிக்கு புளோரிடா கடற்கரைக்கு அருகே அட்லாண்டிக் கடலில் தரையிறங்கும் என நாசா அறிவித்துள்ளது.
9 மாதங்களாக நீடித்த காத்திரிப்பு
2024 ஜூன் மாதம் Boeing Starliner மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர், எதிர்பார்த்ததை விட நீண்ட நாட்கள் விண்வெளியில் இருக்க நேர்ந்தது. Starliner விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்ப முடியவில்லை. பலமுறை திரும்பும் முயற்சிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது SpaceX Crew Dragon மூலம் அவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்படுகிறார்கள்.
உடல்நல சவால்கள் இருக்க வாய்ப்பு
நீண்ட காலம் இடையறியின்றி விண்வெளியில் இருந்ததால், பூமிக்கு திரும்பியவுடன் வீரர்கள் சில உடல் மாற்றங்களை சந்திக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதில்,
தசை மற்றும் எலும்பு பலவீனம்
தலைச்சுற்றல், தலைவலி
உடல் சமநிலை பாதிப்பு போன்றவை இருக்கலாம்.
இதனை கருத்தில் கொண்டு, பூமிக்கு வந்த பின்பு அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் சில வாரங்கள் இருக்க வேண்டியிருக்கும்.
விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றம்
விண்வெளியில் நீண்ட காலம் தங்கி பணியாற்றிய குழுவினரை பூமிக்கு அழைத்து வரும் முறை குறித்தும், விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்கும் இந்த பயணம் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
மார்ச் 19, மாலை 3:27 மணிக்கு, விண்கலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.