ரியோ ராஜ்: சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இருந்து கிடைத்த ஆழமான ஆதரவு!
நடிகரும் டிவி பிரபலமும் ஆன ரியோ ராஜ், தனது திரையுலக பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் சிவகார்த்திகேயன் என்றும், அவரிடம் இருந்து கிடைத்த ஆதரவு தனக்கு பெரிய மரியாதையை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில், சிவகார்த்திகேயனுடன் உடனான தனது நெருக்கமான தொடர்பைப் பற்றி ரியோ ராஜ் பகிர்ந்திருப்பது சமூக வலைத்தளங்ளில் வைரலாகி வருகிறது.
“சிவகார்த்திகேயன் அண்ணா முதல் முறை எனக்கு கால் பண்ணும் போது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நிறைய பேசினாரு. அப்போ கடைசியாக வைக்கும் போது, ‘பெருசா ஜெயிப்போம் ரியோ ’ என்று சொல்லிட்டு வச்சாரு.” என ஞாபகம் கூர்ந்து, உணர்ச்சி மிக்க பகிர்ந்துள்ளார்.
அதன் பிறகு, சுமார் 3-4 ஆண்டுகள் இடைவிடாது அவ்வப்போது பேசிக்கொண்டு இருந்ததாகவும், சிவகார்த்திகேயன் தனது கனவுகளுக்கு உறுதுணையாக இருந்ததாகவும் ரியோ தெரிவித்தார்.
ஒரு வார்த்தையை கடைசி வரை நிறைவேற்றி காட்டிய SK!
“நான் ஹீரோவா படம் பண்ணலாம்னு நினைச்சப்போ, ‘நான் இருக்கேன்’ என்று நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை சிவகார்த்திகேயன் அண்ணாவே தயாரித்தும் கொடுத்தார் .”
இதனால் சிவகார்த்திகேயன் அண்ணா மேல் தனக்கு மிகப்பெரிய மரியாதை உருவாகியதாகவும், வெறும் வார்த்தைகளில் வாழ்த்துவதை விட, வெற்றிக்கு பக்கபலமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததாகவும் ரியோ கூறியுள்ளார்.
மேலும் “நம்மளை சும்மா ஒருத்தர் நல்லா பண்ணுங்க-ன்னு வாழ்த்திட்டு கடந்து போயிடுவாங்க, ஆனா ‘பெருசா ஜெயிப்போம்’ நல்லா பண்ணுங்க-ன்னு சொல்லி, நல்லா பண்ற வரைக்கும் கூட இருக்கிறது அப்படிங்கிறது வேற!.. SK அண்ணா என்ன நடந்தாலும் கூடவே இருந்து உதவி பண்ணாரு! அவர் மேல் எனக்கு மரியாதை அதிகமாகிட்டே போச்சு.
ரியோ ராஜ்ஜின் வளர்ச்சியில் முக்கிய ஓர் அடையாளமாக இருக்கும் இந்த நிகழ்வு மகிழ்ச்சிக்கு உரியதே! ஒவ்வொரு சாதனையும் தனியாக நிகழ்வதில்லை; அதை பின்னணியில் ஏதோ ஒரு மனிதனின் கைபிடித்தல் இருக்கத்தான் செய்கிறது. சிவகார்த்திகேயனின் ஆதரவு மட்டுமின்றி, உறுதுணையாக தொடர்ந்த அன்பும், நட்பும், ரியோவின் மனதில் என்றும் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!