கௌதம் வாசுதேவ் மேனன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது காதல், ஆக்ஷன் திரைப்படங்களே! அதில் சற்றும் ஆர்வம் குறையாது நினைவுக்கு வருவது GVM படத்தின் கதாநாயகி மற்றும் கதாநாயகன், ஏனெனில் இவர் இயக்கிய திரைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும், தாம் வாழ்க்கையும் GVM எடுக்கும் திரைப்படங்கள் போலவே இருக்க வேண்டும் என பல ஆசைகளை கொள்வர்.
அதன் வரிசையில் GVM ஹீரோக்கள்-க்களுக்கு
தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. தற்போது அந்த ஹீரோக்களின் வரிசையில் நடிகர் கார்த்தி இணைய இருப்பதாக திரை வட்டாரங்களில் தரப்பில் இருந்து தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தமிழ் சினிமாவில் தனக்கே உரிய கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! அதன் படி தற்போது நடிகர் கார்த்தி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் (GVM) உடன் புதிய படத்தில் இணைய இருப்பதாகவும், இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்து வரவும், இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.
GVM - Karthi: புதிய கூட்டணி;
கவுதம் மேனன் சமீபத்தில் ஒரு சிறப்பான கதையை கார்த்தியிடம் கூறியிருக்கிறார். கதையின் கரு, உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள், திரைக்கதை கட்டமைப்பு ஆகியவை கார்த்தியை மிகவும் ஈர்த்த நிலையில், கவுதம் வாசுதேவ் மேனனிடம், இது மிகவும் நல்ல கதையாக இருக்கிறது. இதனை மேலும் விரிவாக வேலை பார்த்து ஃபைனல் ஸ்கிரிப்ட்கு தயாரிக்கும் படி கேட்டுள்ளார். தற்போது GVM இக்கதையை முடிக்கும் சூழலில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கதையின் எழுத்து – ‘VTK’ புகழ் ஜெயமோகன்!
இந்த படத்திற்கான கதை, திரைக்கதை, வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்தான் நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ (VTK) படத்திற்கும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற பிரம்மாண்ட படைப்புகளுக்கும் கதையை எழுதியவர் ஆவார். இந்தக் கூட்டணி காரணமாக ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.
எந்த பாணியில் இருக்கும்?
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும், காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படங்களாகவே பெரும்பாலும் உள்ள நிலையில், நடிகர் கார்த்தி GVM ஹீரோக்களின் வரிசையில் எண்ட்ரி கொடுத்தால் என்ன மாதிரியான திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் பலவிதமான சிந்தனையில் இருந்து வருகின்றனர்.
மேலும், கார்த்தி தனது கைவண்ணம் இருக்கும் திரைப்படங்களை முடிந்து கொடுத்த பின்னரே, GVM ஹீரோவாக எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வா வாத்தியார் மற்றும் சர்தார் 2 படங்களில் கமிட்டாகி இருக்கும் கார்த்தி, இவ்விரு படங்களில் வேலைகளை முடித்தவுடன், GVM இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.