மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையின் போது அறிவித்தார்.
2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நிதியமைச்சராக அவர் தாக்கல் செய்யும் 2ஆவது பட்ஜெட் இது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற கருப்பொருளில் இந்த பட்ஜெட்டை இன்று அவர் தாக்கல் செய்தார்.
இதில், மகளிருக்கான அறிவிப்புக்கள் குறித்து பார்க்கலாம்.
1.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்
2.புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்க்கும் விரிவுபடுத்தப்படும்
3.மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி ஊர்காவல்
படையில் பணி வழங்க திட்டம்
4.மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு
5.10 இடங்களில் ரூ.77 கோடியில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்
6.சென்னை,கோவை, மதுரையில் தலா 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும்
7.10,000 மகளிர் சுய உதவுக் குழுக்கள் உருவாக்கப்படும்
8.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹37,000 கோடி கடன் வழங்க இலக்கு