தமிழ் சினிமாவில் நடிகராக பல்வேறு பரிமாணங்களை எடுத்து வந்த ஜெயம் ரவி, சமீப நாட்களுக்கு முன், என்னை இனி வரும் காலங்களில் ரவி மோகன் என்ற பெயரிலேயே அழைக்கும்படி ரசிகர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
ரவி மோகன், ஆர்த்தி உடனான விவகாரத்துக்கு பின், தான் வாழ்க்கையை பல விதங்களில் புதுப்பித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். இவரின் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாதது சற்று வருத்தமே என்றாலும்,ரவி மோகன் அடுத்தடுத்து புது புது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறார்.
தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே பல்வேறு பத்திரியைக்கையாளர் சந்திப்புகளில் டைரக்டர் பக்கம் போவதற்கான வாய்ப்புகள் இருக்குமா என பலர் ரவி மோகனிடம் கேள்வி கேட்க, நிச்சயமாக என பதிலளித்து இருந்தார்.
அதன் படி சமூக வலைதளங்களில் ரவி மோகன் இயக்குனர் அவதராம் எடுக்கப் போவதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. உண்மையாவே ரவி மோகன் இயக்குனர் ஆகப்போராறா, இவருடைய அண்ணா மோகன் ரவிக்கே போட்டியாக மாறப்போகிறாரா என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ரவி மோகன், காதலிக்க நேரமில்லை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புகளில், யோகிபாபு நான் இயக்கும் முதல் படத்தின் நாயகன் என்றெல்லாம் தெரிவித்து இருந்தார். இதெல்லாம் விளையாட்டாக கூறி இருப்பார் என நினைத்திருந்த வேளையில், தற்போது அதனை மெய்யாகும் வேலையில் ரவி மோகன் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இத்தனை ஆண்டு காலமாக, தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நிலையில், தற்போது இயக்குனராக புதிய அத்தியாயத்தை தொடங்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் திரைப்பட வட்டடாரங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.