இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம் என சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
1.பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி ஒதுக்கீடு!
2.நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்
3.அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்
4.ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்
5.பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
6.அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்
7.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும்ன்விரிவு செய்யப்படும். பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
8.அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்
9.ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்
10.எந்தவித சமரசமும் இன்றி இருமொழிக்கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
11.2025 - 26ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்விக் கடன் வழங்கப்படும்
12.குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு தயாராகுபவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்