தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார்.
1.சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்
2.விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு
3.கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடியும் ஒதுக்கீடு
4.தமிழ்நாடு முழுவதும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும்
5.டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்றம்
6.சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும்
7.ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்
8.மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்
9.திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும்
10.ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்
11.காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு
12. 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை
13.புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும்
14. 25 மாவட்டங்களில் மூத்த முடிமக்களுக்கான அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்
15.சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன
16.கடந்த 4 ஆண்டுகளில் 2662 திருக்கோயில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன
17.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.
18.அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்