அடடே!.. நம்ம குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமா மக்களுக்கு பிரபலமான மோனிஷா பிளெஸ்ஸி அடுத்தடுத்து பெரிய படங்கள்ல கமிட்டாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்காங்க!..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ரொம்ப பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தில் நடிகை மோனிஷா பிளெஸ்ஸி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவராத நிலையில் நடிகை மோனிஷா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நேரடியாகவே இதனை உறுதி செய்திருக்கிறார்.
‘கூலி’யில் நடிப்பது குறித்து மோனிஷாவின் உருக்கமான பகிர்வு!
"நான் இதை இதுவரை யாரிடமும் கூறியதே இல்லை. ரஜினி சாரின் ‘கூலி’ படத்தில் நான் ஒரு ரோலில் நடித்து வருகிறேன்" எனக் கூறியுள்ளார் மோனிஷா. இதைக் கண்டு ரசிகர்கள் பலரும் இவரின் வளர்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘மாவீரன்’ படத்திலிருந்து ‘கூலி’க்கு – கிடைத்த சிறப்பு வாய்ப்பு!
மோனிஷா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மாவீரன் திரைப்படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்த சந்துரு, இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் மோனிஷாவைப் பற்றி பரிந்துரைத்ததாகவும், அதன் மூலம் ‘கூலி’ திரைப்பட வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், எனக்கு நடிப்புத் துறையில் கிடைத்த ஒவ்வொரு அங்கீகாரத்திற்கும் ‘மாவீரன்’ திரைப்படம் முக்கிய காரணம் என்றும், அதற்காக அஸ்வின் அண்ணா, சிவாகார்த்திகேயன் அண்ணா, சரிதா மேம் ஆகியோருக்கு எப்போதும் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்," என்று மோனிஷா உற்சாகத்தோடு பகிருந்திருப்பது, சோஷியல் மீடியாக்களில் தனிகவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலக்கட்டத்தில் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடையே பிரபலமான மோனிஷா தனது தனித் திறமையால், இன்று சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் போன்ற பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.